ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி அசத்தல் வெற்றி பெற்றது.
சென்னை அணி தக்க வைத்துக்கொள்ளாத 2 வீரர்கள் பெங்களூரு அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளனர். டு பிளசிஸ் அதிரடி ஆட்டம், ஹேசில்வுட் துல்லிய வேகப்பந்து வீச்சு தாக்குதல் என லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. மும்பை மைதானத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி முதல் ஓவரிலேயே அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தது.
அனுஜ் ராவத் இந்தப் போட்டியிலும் 4 ரன்களில் நடையை கட்ட, விராட் கோலி கோல்டன் டக் ஆகி அதிர்ச்சி அளித்தார். டு பிளசிஸ் உடன் இணைந்து அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் 23 ரன்களில் வெளியேறினார். 64 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்தாலும், பெங்களூரு அணிக்கு பக்கபலமாக கை கொடுத்தது டு பிளசிஸ்-ன் அதிரடி ஆட்டம். வாண வேடிக்கை காட்டிய டு பிளசிஸ் சதமடிக்கும் வாய்ப்பை இழந்து 96 ரன்களில் வெளியேறினார். இறுதியாக பெங்களூரு அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்தது.
182 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்தொடங்கிய லக்னோ அணிக்கும் தொடக்கம் சரியில்லாமல் போனது. கேப்டன் ராகுல் 30 ரன்களில் நடையை கட்ட, குருனால் பாண்டியா அதிரடியாக ஆடினார். அடுத்து வந்த வீரர்கள் சோபிக்கவில்லை, ஹோல்டர் இறுதி ஓவரில் 2 சிக்ஸர் அடித்து வெளியேறினார். முடிவில் லக்னோ அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே பெங்களூரு அணியின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. கடந்த சீசனில் சென்னை அணியில் இடம்பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்கள் ஃபாஃப் டு பிளசிஸ் மற்றும் ஹேசில்வுட். இருவரையும் சென்னை அணி தக்க வைக்கத் தவறி, மெகா ஏலத்திலும் எடுக்க முடியாமல் போனது. இந்த இரு வீரர்களால் தான் நேற்று ஆர்சிபி தனது 5 வது வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் பெங்களூரு அணி 2 ஆவது இடத்திற்கு முன்னேறியது. லக்னோ அணி 8 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்தில் இருக்கிறது.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'