Published : 13,Apr 2022 07:20 AM

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அபராதம்

UK-Prime-Minister-Boris-Johnson-has-been-fined-for-violating-corona-prevention-rules

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவிய நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இங்கிலாந்தில் கொரோனா தடுப்புக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி, ஜூன் 19-ஆம் தேதி பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பிறந்த நாளை விழாவாகக் கொண்டாடினார்.

இதில் அமைச்சர் ரிஷி சுனக் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். நாட்டின் பிரதமரே விதிகளை மீறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், லண்டன் மாநகரக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விதிமீறல் உறுதியானதைத் தொடர்ந்து, பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

இதையும் படிக்க: ஐரோப்பாவின் ஒருநாள் கொள்முதல்தான் எங்கள் ஒருமாத கொள்முதல்- அமெரிக்காவுக்கு இந்தியா பதில்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்