Published : 09,Apr 2022 07:21 PM

டாஸ் வென்ற பெங்களூரு அணியில் மேக்ஸ்வெல் புதுவரவு - மும்பை இந்தியன்ஸ் முதல் வெற்றிபெறுமா?

Royal-Challengers-Bangalore-won-the-toss-against-Mumbai-indians

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

15-வது சீசன் ஐபிஎல் போட்டி, மும்பை மற்றும் புனே மைதானத்தில் கடந்த 26-ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வகையில், அணிகள் தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றன. 16 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகிறது. மும்பையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை மற்றும் ஐதராபாத் மோதுகின்றன.

புனேவில் நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி மற்றும் மும்பை அணி மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளசிஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி பேட்டிங்கில் களமிறங்குகிறது.

5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி இந்த முறை, ஹாட்ரிக் தோல்வியடைந்து முதல் வெற்றியை பதிவு செய்யாமல் திணறி வருகிறது. அதனால் தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் களமிறங்குகிறது. அணியில் டைமல் மில்ஸிற்கு பதிலாக உனத்கட் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் டேனியல் சாம்ஸ்-க்கு பதிலாக ராமன் தீப் சேர்க்கப்பட்டுள்ளார்.

image

இந்த சீசனில் இதுவரை ஆடிய 3 போட்டிகளில் ஆர்சிபி அணி 2 வெற்றிகளை பெற்றுள்ளது. மேலும், திருமணத்திற்காக ஐபிஎல் போட்டிகளில் பங்குகொள்ளாமல் இருந்த கிளன் மேக்ஸ்வெல் தற்போது ரூதர்போர்டுக்கு பதிலாக இந்தப் போட்டியில் களமிறங்குகிறார்.

ஆர்சிபி அணி வீரர்கள்:

ஃபாஃப் டூ ப்சிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராத் கோலி, கிளன் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), டேவிட் வில்லி, ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), டிவால்ட் பிரெவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கைரன் பொல்லார்டு, ராமன்தீப் சிங், முருகன் அஷ்வின், ஜெய்தேவ் உனத்கட், ஜஸ்ப்ரித் பும்ரா, பாசில் தம்பி.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்