Published : 05,Sep 2017 03:04 AM

கட்சி அலுவலகத்தை கைப்பற்றுவது யார்? ஈ.பி.எஸ், டிடிவி தரப்பு மோதல்

Tiruvarur-ADMK-Party-Fight

தினகரன் சார்பில் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் கட்சி அலுவலகத்திற்கு வந்ததால், திருவாரூர் அ.தி.மு.க அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தின் அ.தி.மு.க அம்மா அணிச்செயலாளராக, எஸ்.காமராஜ் என்பவரை நியமித்து டிடிவி தினகரன் சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த எஸ்.காமராஜ், பின்னர் அதிமுக அலுவலகத்திற்கு ஆதரவாளர்களுடன் வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த தினகரன் ஆதரவாளர்கள் வெடி வெடித்தும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்த கட்சி நிர்வாகிகளுடன் எஸ்.காமராஜ் ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஆனால் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினராக உள்ள உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜின் கட்டுப்பாட்டில், அந்த அ.தி.மு.க அலுவலகம் செயல்பட்டு வந்துள்ளது. எனவே தினகரனால் நியமிக்கப்பட்ட மாவட்டச்செயலாளர் வருகை தந்துள்ளதை அறிந்த அமைச்சர் காமராஜின் ஆதரவாளர்கள் உடனே கட்சி அலுவகத்தில் திரண்டனர். இதனால் அங்கு பிரச்சனை உண்டாகி, அடிதடி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டதால், இருதரப்பினரிடையே காவல் அதிகாரிகள் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பதற்ற நிலையை குறைத்தனர். 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்