Published : 04,Sep 2017 02:51 PM

திருச்சியில் 8 ஆம் தேதி நீட் எதிர்ப்பு பொதுக்கூட்டம்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

Opposition-conducting-a-public-meeting-at-Trichy-on-NEET-issue

திருச்சியில் 8 ஆம் தேதியன்று நீட் எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வாய்ப்பை இழந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்குக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள் சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. திமுக தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், முஸ்லிம் லீக், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கலந்துகொண்டன.

இந்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனிதாவின் உயிர்பலிக்கு மத்திய மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து முதற்கட்டமாக, செப் 8 ஆம் தேதி திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துகிறோம். அந்தப் பொதுக்கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையை அறிப்போம். அந்த அறிவிப்பு மத்திய, மாநில அரசுகள் விழிப்படையும் வகையில் இருக்கும். மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமே மத்திய மாநில அரசுகளின் அலட்சியப் போக்குதான். புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, பிரச்னையை திசை திருப்புகிற முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை நிச்சயம் எடுப்போம்” என்று கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்