நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய தமிழக அரசு முயற்சி செய்யும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கரூரில் இன்று மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. அதில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தனர். பின்னர் பேசிய தம்பிதுரை, கரூர் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் 20 ஏக்கர் பரப்பளவில் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளதாகத் தெரிவித்தார். அடுத்த கல்வி ஆண்டிலேயே மாணவர் சேர்க்கை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.
மேலும் பேசிய அவர், “நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் ஜெயலலிதாவின் கருத்து. அதிமுகவின் கருத்தும் அதுதான். தமிழகத்தை பொறுத்தவரை நீட் தேர்வு என்பது தேவையில்லாத ஒன்று. உச்சநீதிமன்ற உத்தரவிற்கு கீழ்படிய வேண்டிய நிலை இருக்கிறது. இருப்பினும் உச்சநீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய தமிழக அரசு முயற்சி செய்யும்” என்று கூறினார்.
Loading More post
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: தமிழகம் வருகிறார் வெங்கையா நாயுடு
‘கொல்கத்தா புறப்படுகிறேன்’- கொண்டாட்டத்தில் விராட் கோலி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!