[X] Close

பைக்கில் வந்து வழிப்பறி செய்த நபர்: காட்டிகொடுத்த சிசிடிவி !

குற்றம்

Police-arrest-person-who-theft-with-the-help-of-CCTV

ஏழுகிணறு பகுதியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறித்த திருடனை சிசிடிவி உதவியோடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை கொண்டித்தோப்பு ஜிந்தாசாகிப் தெருவில் வசித்து வருபவர் ரத்னாதேவி. இவர் கடந்த 17ம்தேதி ஏழுகிணறு படவட்டம்மன் கோயில் - பெத்தநாயக்கன் தெரு சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ரத்னாதேவியின் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றே கால் சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றிருக்கிறர்.

image


Advertisement

அதிர்ச்சியடைந்த ரத்னாதேவி ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆய்வின் ஒருபகுதியாக, அந்த பகுதியில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் வழிப்பறி கொள்ளையனின் இருசக்கர வாகனத்தின் பதிவெண் மற்றும் அடையாளங்களை கொண்டு போலீசார் தீவிர விசாரணை செய்தனர். தங்க நகையை பறித்துச் சென்ற மண்ணடியைச் சேர்ந்த முகமது பைசல் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரரின் தங்கச் சங்கிலி மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட முகமது பைசல் மீது கொரட்டூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே சங்கிலி பறிப்பு வழக்கு உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட முகமது பைசல் விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

சமீபத்திய செய்தி: காங்கிரஸ் எம்எல்ஏ ரிசார்ட்டில் மது விருந்து: காவல் ஆணையரின் அதிரடி என்ட்ரி-நடந்தது என்ன?

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close