Published : 03,Sep 2017 04:40 PM

மீண்டும் திறந்த டாஸ்மாக் கடையை சூறையாடிய பொதுமக்கள்

Public-attacked-Tasmac-shop-in-Kovai

கோவை புலியகுளம் பகுதியில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக்கை திறக்க முயன்றதால் மக்கள் கடையை சூறையாடினர்.

நீதிமன்ற உத்தரவின் படி சில வாரங்களுக்கு முன் புலியகுளம் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. தற்போது, நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என நீதிமன்றம் வழக்கு ஒன்றில் விளக்கமளித்தது. அதன் அடிப்படையில் புலியகுளம் டாஸ்மாக் கடையில் நேற்று மாலை மதுபானங்கள் எடுத்துவந்து வைக்கப்பட்டன.

இன்று கடையை திறக்க ஊழியர்கள் ஏற்பாடு செய்துகொண்டிருந்தபோது, அங்கு வந்த மக்கள் மதுபான பாட்டில்களை சாலையில் போட்டு உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடையை மக்கள் சூறையாடியதால் அங்கு பாதுகாப்பிற்காக காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். குடியிருப்புக்கு மத்தியில் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்