Published : 15,Mar 2022 07:53 PM

'கங்குலியிடம் பேசப்போகிறேன்' இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் கிரிக்கெட்?

Cricket-is-not-politics-PCB-Chief-Ramiz-Raja-on-the-series-between-India-Pakistan-Tournament-and-he-his-going-to-talk-with-BCCI-Chief-Ganugly-on-this

இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் கடைசியாக கடந்த 2012 - 13 வாக்கில் நேரடி கிரிக்கெட் தொடரில் பலப்பரீட்சை செய்து விளையாடின. அதன் பிறகு இரு அணிகளும் ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறது. கடந்த 2021 டி20 தொடரின் முடிவுக்கு பிறகு கூட இந்தியா - பாகிஸ்தான் தொடர் குறித்து பேச்சுகள் எழுந்தன. அதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா, ட்வீட் மூலம் முன்னெடுத்தார். இருந்தும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) தரப்பில் அதற்கு ஆர்வம் காட்டப்படவில்லை. 

image

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஆகிய நான்கு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் தொடரை நடத்துவது குறித்து இப்போது பேசியுள்ளார் ரமீஸ் ராஜா. 

“துபாயில் நடைபெற உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் நான் இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் பேசுவேன். நாங்கள் இருவரும் முன்னாள் கேப்டன்கள். முன்னாள் வீரர்கள். அதனால் எங்களுக்கு கிரிக்கெட் என்பது விளையாட்டு மட்டுமே அரசியல் அல்ல. இந்தியா இதில் பங்கேற்க விரும்பாத பட்சத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆண்டுதோறும் பாகிஸ்தானில் தொடரை நடத்த முயற்சிப்போம்” என அவர் தெரிவித்துள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்