எம்பிக்கள் கேள்வி கேட்பதை மோடி விரும்ப மாட்டார்: பாஜக எம்பி பேச்சு

எம்பிக்கள் கேள்வி கேட்பதை மோடி விரும்ப மாட்டார்: பாஜக எம்பி பேச்சு
எம்பிக்கள் கேள்வி கேட்பதை மோடி விரும்ப மாட்டார்: பாஜக எம்பி பேச்சு

பாஜக எம்பிகளின் நியாயமான கேள்விகளுக்கு பிரதமர் மோடி விரும்ப மாட்டார் என்றும், அவ்வாறு கேள்வி கேட்டால் அவர் கோபப்படுவார் என பாஜக  எம்.பி. ஒருவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் விவசாயிகள் பிரச்னைகள் தொடர்பான நிகழ்ச்சியில், பாஜக எம்.பி நானா படோல் கலந்துகொண்டு பேசியதாவது, "எந்த ஒரு கேள்வியையும் எதிர்கொள்வதை பிரதமர் மோடி விரும்ப மாட்டார். பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தின் போது ஓபிசி அமைச்சகம் மற்றும் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக நான் கேள்வி எழுப்பியதால் மோடி மிகவும் கோபப்பட்டார்.

மோடியிடம் நீங்கள் கேள்வி எழுப்பும் போது, அவர் உங்களிடம் பாஜகவின் சித்தாந்தம் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றி அறிந்து உள்ளீர்களா? என கேட்பார். 

எம்.பி.க்கள் கூட்டத்தின் போது, பசுமை வரி, ஓபிசி அமைச்சகம், விவசாயத் துறையில் அதிக முதலீடு உள்ளிட்டவை பற்றி நான் சில பரிந்துரைகளை வழங்கினேன். இதனால், ஆத்திரம் அடைந்த மோடி, அமைதியாக இருக்குமாறு என்னிடம் கூறினார். மோடி எம்.பி.க்களை அடிக்கடி சந்திக்கிறார். ஆனால், கேள்விகள் எழுப்படுவதை அவர் விரும்புவதில்லை” என்றார். 

பாஜக எம்.பிக்கள் கூட்டத்தின் போது, பிரதமர் மோடி எம்.பி படோலை கண்டித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், மேற்கண்டவாறு படோல் பேசியுள்ளார். மேலும், மஹாரஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்தியிலிருந்து மாநிலத்திற்கு நிதியை பெற திறமையற்றவராக உள்ளார். அனைத்து மத்திய அமைச்சர்களும் எப்போதும் ஒருவித பயத்திலேயே உள்ளனர். நான் நீக்கப்படும் பட்டியலில் இடம்பெற வாய்ப்பு உள்ளது, ஆனாலும் எனக்கு எந்த பயமும் இல்லை என்று அவர் பேசினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com