Published : 12,Mar 2022 10:51 AM

ஐபிஎல் 2022: வலை பயிற்சி மேற்கொண்ட தோனி - உத்தப்பாவின் ஸ்டம்ப் கேமரா வீடியோ வைரல்!

IPL-2022-Stump-Camera-video-of-CSK-Skipper-MS-Dhoni-and-Robin-Uthappa-s-Video-goes-viral-ahead-of-season-to-kick-start

வரும் 26-ஆம் தேதி 16-வது ஐபிஎல் சீசன் ஆரம்பமாக உள்ளது. அதற்கு தயாராகும் வகையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூரத் நகரில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த பயிற்சி முகாமில் சென்னை அணியின் கேப்டன் தோனி, சீனியர் வீரர்கள் ராபின் உத்தப்பா, ராயுடு மற்றும் இளம் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 

இந்நிலையில் கேப்டன் தோனி மற்றும் ராபின் உத்தப்பா வலை பயிற்சி மேற்கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. அவர்கள் பயிற்சி செய்த போது கிரிக்கெட் ஸ்டம்பில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவில் தோனி, உத்தப்பா மற்றும் சிலர் உள்ளனர். இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை அணி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்