[X] Close

கேரள மருத்துவக் கழிவுகளை தமிழக விவசாய நிலத்தில் கொட்ட முயன்றவர் கைது

kerala-through-their-medical-garbage-in-tamilnadu-boarder

கேரள மாநிலத்தின் மருத்துவக் கழிவுகளை தமிழக விவசாய நிலத்தில் கொட்டிய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்.

கேரளாவிலிருந்து கொண்டு வந்த இறைச்சி மற்றும் மருத்துவக் கழிவுகளை பொள்ளாச்சி அருகே விவசாய நிலங்களில் கொட்டிய விவகாரத்தில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். மீனாட்சிபுரம் வடக்கு பாறைமேடு பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்தில் குழிகளைத் தோண்டி கேரளாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இறைச்சி கழிவுகளை அதிகாலையில் சிலர் கொட்டினர்.

இது தொடர்பாக‌ காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து விசாரணை நடத்தி அருள்பிரகாஷ் என்பவரை கைது செய்தனர். கேரளாவுக்கு தப்பிய ரியாஸ் என்பவரை தேடி வருகின்றனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close