Published : 03,Mar 2022 02:50 PM
எவ்வளவு முயன்றும் காப்பாற்ற முடியாமல் போன பெண் யானை - கவலையில் வனத்துறை

பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் வனப்பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்ட 5 வயது பெண் காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் பகுதியில் கடந்த 27ம் தேதி கால் மற்றும் உடல் பகுதிகளில் காயத்துடன் உணவின்றி தவித்து வந்த 5 வயது பெண் காட்டு யானையை, வனத்துறையினர் கும்கி யானைகளின் உதவியோடு மீட்டனர்.
இதையடுத்து வன கால்நடை மருத்துவக் குழு சார்பில் யானைக்கு முதலுதவி மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, உணவு வழங்கி பராமரித்து வந்தனர் இந்நிலையில், மருத்துவக் குழு கண்காணிப்பில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த யானை, உடல் நலம் பாதிக்கப்பட்டு இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தது.
இதைத் தொடர்ந்து மருத்துவக் குழு சார்பில் இறந்த யானைக்கு உடல்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இதன் பிறகே யானையின் இறப்பிற்கான காரணம் குறித்து தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.