[X] Close

மெஜாரிட்டி இழந்த அரசு நீடிக்கக் கூடாது: குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் கடிதம்

government-should-not-lose-the-majority--Stalin-s-letter-to-the-President

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை திமுக, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சி எம்.பி.க்கள் நேரில் சந்தித்து வழங்கினர்.


Advertisement

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டப்பேரவையில் இப்போது 117 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 113 பேரின் ஆதரவு மட்டுமே இருப்பதாக அந்தக் கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதைக் குறிப்பிட்டு ஆளுநருக்கு கடிதம் எழுதியதாகவும், திமுக எம்எல்ஏக்கள் குழு நேரில் சந்தித்து வலியுறுத்தியதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அமைச்சரவை பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில், அதை நிரூபிக்க வேண்டியது ஆளுநர் மாளிகையில் அல்ல என்பதை ஆளுநர் மறந்துவிட்டதாகவும், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் இதுதொடர்பாக அளித்துள்ள தீர்ப்புகள் மீறப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.


Advertisement

பெரும்பான்மையை இழந்த அரசை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிடாமல் அமைதி காப்பது, குதிரை பேரத்தை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளதாகவும், உடனடியாக தலையிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட ஆளுநருக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close