Published : 20,Feb 2022 09:32 AM
வேளாண் பயன்பாட்டுக்கு 100 ட்ரோன்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டத்தின்கீழ் விவசாயத்திற்கான 100 ட்ரோன்களின் இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.
இதற்கான விழாவில் பேசிய பிரதமர், நாட்டின் தொழில்நுட்ப அடிப்படையிலான வேளாண்மை வேகம் பெற்று வருவதாகத் தெரிவித்தார். ட்ரோன் தயாரிப்பு ஸ்டார்ட் அப் கலாசாரம் அதிகரித்துள்ளதாக கூறிய பிரதமர், பயிர்களுக்கு உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதில் ட்ரோன்கள் மிகவும் பயனளிக்கும் என்றார்.
தற்போது வேளாண் பயன்பாட்டுக்காக சுமார் 200 ட்ரோன்கள் இருக்கும் நிலையில் விரைவில் இந்த எண்ணிக்கை சில ஆயிரங்களாக உயரும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். ட்ரோன் தயாரிப்பு மற்றும் பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்று மோடி கூறினார்.