Published : 05,Feb 2022 08:50 PM

பிப்-11ம் தேதி ஓடிடியில் வெளியாகும் பா.ரஞ்சித்தின் ‘ரைட்டர்’

director-pa-ranjith-and-Samuthirakani-Writer-Premiering-February-11th

இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘ரைட்டர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஃப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி வெளியான ‘ரைட்டர்’ தியேட்டர்களில் வெளியாகி பாராட்டுகளைக் குவித்தது. சமுத்திரக்கனி, ஹரிக்கிருஷ்ணன், கவிதா பாரதி உள்ளிட்டோர் நடிப்பில் கவனம் ஈர்த்தனர். காவல்துறையில் நிலவும் சாதி அடக்குமுறைகளையும் காவலர்களின் ’ரைட்ஸ்’களையும் தொய்வில்லாத திரைக்கதையால் அழுத்தமாகப் பேசி முதல் படத்திலேயே கவனம் ஈர்த்துள்ளார் ஃப்ராங்க்ளின் ஜேக்கப்.

image

image

இந்த நிலையில், ‘ரைட்டர்’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை தெலுங்கின் முன்னணி ஓடிடி தளமான ’ஆஹா’ கைப்பற்றியுள்ளது. நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தை தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸும் மை ஹோம் நிறுவனமும் இணைந்து நடத்திவரும்‘ஆஹா’ ஓடிடி தளம் தற்போது தமிழிலும் வந்துள்ளது. இந்த நிலையில், ‘ரைட்டர்’ படம் ஆஹா ஓடிடி தளத்தில் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியாகிறது என்று ஆஹா ஓடிடி தளமும் நடிகர் சமுத்திரகனியும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்