Published : 04,Feb 2022 10:45 PM
38 வயதில் நீட் தேர்வெழுதி உள்ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேரும் முன்னாள் ஆசிரியர்
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியபொம்பட்டி கிராமத்தை சேர்ந்த வாசுதேவன் என்பவர் 38 வயதில் நீட் தேர்வெழுதி 7.5 உள்ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளார்.
விலங்கியலில் எம்.எஸ்.சி. எம். எட். படித்த வாசுதேவன் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பயணியாற்றி வந்துள்ளார். கொரோனா பொதுமுடக்கத்தின் போது ஆசிரியர் பணி பறிபோக, நீட் தேர்வுக்கு தயாராகியுள்ளார். அதில் வெற்றிபெற்று 295 மதிப்பெண்களை வாசுதேவன் பெற்றார். அவருக்கு மருத்துவ கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்துள்ளது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்கான இட ஒதுக்கீட்டு ஆணையை, ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வழங்கியுள்ளார்.