[X] Close

புகழுரையே சட்டசபையில் தொடர்கிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு

AIADMK-ministers-continues-same-fact-in-Assembly--Stalin

தமிழக சட்டசபையில் ’சின்னம்மா, பெரியம்மா, குட்டிம்மா’ என்றெல்லாம் புகழ்ந்து பேசுவதுதான் தொடர்ந்து நடக்கிறது என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Advertisement

சட்டசபையில் ஆளுநர் அவர்களின் உரை மீது, நேற்றைய தினம் நிகழ்த்திய உரையில் இருந்த ஒரு வார்த்தை, அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை கண்டித்து, மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து தற்காலிகமாக வெளிநடப்பு செய்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், சட்டமன்ற கேள்வி நேரத்தின் போது சின்னம்மா, பெரியம்மா, குட்டிம்மா, என்றெல்லாம் பேசுவதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.


Advertisement

கேள்வி நேரத்தில் மட்டுமல்ல, எந்த நேரத்திலும் யாரையும் புகழ்ந்து பேசக்கூடாது, பிரச்னைகளை மட்டும் தான் பேச வேண்டும் என திமுக உறுப்பினர்களிடம் தான் கண்டிப்புடன் தெரிவித்திருப்பதாக கூறினார். புகழுரை பேசுவதை தவிர்க்குமாறு பலமுறை எடுத்துச் சொல்லியும் அதிமுகவினர் அதையே தொடர்வதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.


Advertisement

Advertisement
[X] Close