'உலகக் கோப்பையை வெல்வதுதான் வெற்றிகரமான கேப்டனுக்கான அளவுகோல் என்றால் கங்குலி எத்தனை வென்று கொடுத்துள்ளார்' எனக் கேள்வி எழுப்பியுள்ளார் ரவி சாஸ்திரி.
நடந்து முடிந்த தென் ஆப்ரிக்கா டெஸ்ட் தொடருடன் இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் விராட் கோலி. கேப்டனாக ஒரு உலகக் கோப்பையைக்கூட பெற்றுத் தர முடியவில்லை என பலராலும் விமர்சிக்கப்பட்டு வரும் சூழலில், விராட் கோலிக்கு ஆதரவாக முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி களமிறங்கி பேசியுள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ரவி சாஸ்திரி கூறுகையில், ''விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியது குறித்து பலரும் பலவிதமாக பேசி வருகின்றனர். உண்மை தெரியாமல் அவ்வாறு பேச எனக்கு நேரமில்லை. இந்திய அணிக்காக 7 வருடங்கள் பயிற்சியாளராக இருந்துவிட்டுத்தான் ஓய்வு எடுத்துள்ளேன். நான் அணியின் ஒரு பகுதியாக இருந்தேன் என்பதால், பொது இடங்களில் அதுகுறித்துப் பேச எனக்கு விருப்பமில்லை.
ஐசிசி உலகக்கோப்பை வென்றுக் கொடுப்பவர்தான் சிறந்த கேப்டன் என்றால் சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட, லக்ஷ்மண் ஆகியோர்கூட தான் உலகக்கோப்பையை வென்றதில்லை. அதற்கென்று அவர்கள் மோசமான வீரர்கள் என்று கூறி விட முடியுமா? பின்னர் எப்படி கோலியை விமர்சித்து பேசலாம். சச்சின் தெண்டுல்கரே 6 உலகக் கோப்பைகளில் விளையாடியப் பிறகுதான் கடைசியில் ஒரு கோப்பையை வென்றார். எனவே உலகக்கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்பதற்காக விமர்சிக்கக்கூடாது. தனிப்பட்ட விளையாட்டு எப்படி உள்ளது, நேர்மையாக இருக்கிறார்களா என்பதை தான் பார்க்க வேண்டும்'' என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இதையும் படிக்க: ஆண் குழந்தைக்கு தந்தையானார் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி