[X] Close

சென்னை 4 வயது மகனை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை; தந்தையிடம் போலீஸ் விசாரணை

குற்றம்

Chennai-Mother-commits-suicide-after-killing-4-year-old-son

சென்னையில் வாய்பேச முடியாத 4 வயது மகனை கொலை செய்துவிட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அண்ணாசாலை பெருமாள் முதலி தெருவை சேர்ந்தவர் ஷோபா (வயது 31). இவர் கடந்த 2014 ஆண்டு வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தினேஷ்குமார் என்பவரை காதிலித்து திருமணம் செய்து கொண்டார். தினேஷ் தனியார் நிறுவனம் ஓன்றில் வேலை பார்த்து வருகிறார். திருமணத்திற்கு பின் ஷோபா வண்ணாரப்பேட்டையில் கணவருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு 4 வயதில் கீர்த்திக் என்ற ஆண் குழந்தை உள்ளது. 4 வயதான குழந்தை கீர்த்திக், வாய் பேசமுடியாமல் இருந்துள்ளார். இதற்காக அவரை அவரது பெற்றோர் பல்வேறு மருத்துவர்களிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இருப்பினும் சிகிச்சை ஏதும் பலனளிக்கவில்லை.

இப்படியான சூழலில், குழந்தை வாய் பேச முடியாமல் போனதால் மன உளைச்சல் அடைந்த தாய் ஷோபாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. பின்னர் ஷோபாவும் மனநல நிபுணர்களிடம் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தினேஷ் தனது மனைவி மற்றும் குழந்தையை அண்ணாசாலையில் உள்ள மாமியார் வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு சென்றுள்ளார்.


Advertisement

image

இரவு பணிமுடிந்து வீட்டிற்கு வந்த தினேஷ் படுக்கையறை கதவு உள்ளபக்கம் பூட்டி இருந்தால் கதவை தட்டினார். கதவு திறக்கபடாததால் சந்தேகமடைந்த தினேஷ் உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்ற பார்த்த போது ஷோபா தூக்கில் இறந்த நிலையிலும், குழந்தை கீர்த்திக் மெத்தையில் இறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிரச்சியடைந்திருக்கிறார்.

பின்னர் தினேஷ் இது குறித்து அண்ணாசாலை போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு வந்த போலீசார் இருவரது சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் குழந்தை கீர்த்திக் 4 வயதாகியும் வாய்பேச முடியாததால் மனநலம் பாதிக்கப்பட்ட ஷோபா குழந்தையை கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாக போலீசார் கூறியுள்ளனர். இதனையடுத்து கணவர் தினேடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்தி: தூத்துக்குடி: கோவிலில் பெண் பக்தர்கள் குளிக்கும் அறையில் ரகசிய கேமரா- போலீசார் விசாரணை

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close