[X] Close

ஆற்றில் சுழன்று கொண்டிருக்கும் ஐஸ் டிஸ்க்: அமெரிக்காவில் அரங்கேரிய இயற்கை அன்னையின் விந்தை

உலகம்

Ice-disk-floating-in-the-river-and-This-is-Mother-Nature-s-wonder-staged-in-the-United-States-Maine

விந்தைகள் நிறைந்தது இயற்கை. அதனால்தான் இயற்கை அவசரப்படுவதில்லை, இருந்தாலும் எல்லா பணிகளையும் நிறைவேற்றிவிடுகிறது என லாவோ ட்ஸூ சொல்லியுள்ளார். அப்படி ஒரு பணியைதான் அமெரிக்காவின் மேய்ன் மாகாணத்தில் பாய்ந்தோடும் ஆற்றில் செய்துள்ளது இயற்கை.

அந்த மாகாணத்தில் உள்ள வெஸ்ட்புரூக் நகரில் தற்போது மைனஸ் டிகிரி சென்டிகிரேட் தட்பவெப்ப சூழல் நிலவி வருகிறது. அதனால் அந்நகரம் முழுவதும் உறை பனியில் உறைந்து போயுள்ளது. அங்குள்ள நீர் நிலைகளில் ஒன்றான Presumpscot ஆற்றின் நீரும் உறைந்துள்ளது. அதனால் அதில் பிரம்மாண்ட வட்ட வடிவிலான ஐஸ் டிஸ்க் ஒன்று உருவாகி சுழன்று கொண்டிருக்கிறது.

image


Advertisement

முதன்முதலாக கடந்த 2019-இல் இது மாதிரியான ஐஸ் டிஸ்க் ஒன்று உருவாகி இருந்தது. அப்போது அது பரவலான பார்வையை பெற்றிருந்தது. 

தற்போது மீண்டும் அதே போன்றதொரு ஐஸ் டிஸ்க் உருவாகி உள்ளது. 

அதன் படங்களை வீடியோவாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த காட்சியை பார்க்க பெருந்திரளான மக்கள் அங்கு கூடி வருவதாகவும், அதனால் வியாபாரம் களைக்கட்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close