[X] Close

பெரியகுளம் சென்ற தினகரனுக்கு அமோக வரவேற்பு 

huge-response-for-dinakaran-in-periyakullam

12 ஆண்டுகளுக்கு பின் தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு சென்ற டிடிவி தினகரனுக்கு அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 


Advertisement

தேனி மாவட்டம் சின்னமனூரில் ஒன்றிய செயலாளர் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்கு வருகை தந்த டிடிவி தினகரன் அவர்களுக்கு பெரியகுளம் டிடிவி ஆதரவாளர்கள் வெடி வெடித்து உற்சாகமாக வறவேற்றனர். டிடிவி  அதிமுக சார்பாக கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியில் நின்று காங்கிரஸ் வேட்பாளர் ஆருண்ரசித்திடம் தோல்வியடைந்தார். இதனைத்தொடர்ந்து பெரியகுளத்தை விட்டு சென்ற அவர் இதுவரை தேனி மாவட்டத்திற்கு வருகை தராத நிலையில் நேற்றிரவு 12 மணி அளவில் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக பெரியகுளத்திற்கு வருகை தந்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் பெரியகுளம் தென்கரை பகுதியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் அலுவலகத்திற்கு முன்பு வெடிகளை வெடித்து தினகரனுக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர்.  
 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close