Published : 08,Jan 2022 08:05 AM
பொங்கலை முன்னிட்டு 4 படங்கள் திரைக்கு வர இருப்பதாக தகவல்

பொங்கலை முன்னிட்டு 4 திரைப்படங்கள் திரைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி 13ஆம் தேதி திரைக்கு வர இருந்த நடிகர் அஜித்தின் வலிமை படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்களை அதே தேதியில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். சசிகுமார் நடிப்பில் உருவான கொம்பு வச்ச சிங்கமடா, காமெடி நடிகர் சதீஷ் நாயகனாக நடித்துள்ள நாய்சேகர், கார்பன் ஆகிய திரைப்படங்கள் வரும் 13ஆம் தேதி திரையிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் நடித்த 'என்ன சொல்ல போகிறாய்' படமும் வெளியிட அதன் தயாரிப்பாளர் ஆலோசித்து வருகிறார். இதன்மூலம் 4திரைப்படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.