நடிகர் ரன்வீர் சிங்கின் ’83’ படத்தை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
ரன்வீர் சிங், ஜீவா, தீபிகா படுகோனே நடிப்பில் சமீபத்தில் ‘83’ படம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாற்றில் இடம்பிடித்த வெற்றிக் கதையை அடிப்படையாக கொண்டு ‘83’படம் உருவாகியுள்ளது. கபீர் கான் இயக்கியுள்ள இப்படத்தில் ரன்வீர் சிங் கபில் தேவ்வாகவும், அவரின் மனைவி ரோமியா பாடியா கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் நடித்துள்ளார். திருமணத்திற்குப்பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் ’83’ என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஜீவா கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தாக நடித்துள்ளார்.
இந்த நிலையில், இப்படத்தைப் பார்த்த சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். ” '83' சிறந்த ஆல் ரவுண்ட் படம். முதல் உலகக்கோப்பை வெற்றியின் சின்ன சின்ன தருணங்களையும் நினைவுக்கூர வைத்தது. அந்த வெற்றி சிறுவனுக்கும் உத்வேகம் அளித்தது என்பதை நன்கறிவேன்” என்று தனக்கு உத்வேகம் அளித்ததையும் நினைவுகூர்ந்து படத்தினையும் பாடியுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள ரன்வீர் சிங்கும் “அந்த சிறுவன் பல தலைமுறைகளுக்கும் உத்வேகம் அளித்துள்ளான். நன்றி மாஸ்டர்” என்று பதிலளித்துள்ளார்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai