Published : 26,Aug 2017 08:30 AM
சிறிய ரக விமான சேவையை விரைவில் தொடங்கும் ஏர் இந்தியா

ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் வருகின்ற 30 ஆம் தேதி முதல் சிறிய ரக விமான சேவையை தொடங்குகிறது.
பெரிய நகரங்களுடன் சிறிய நகரங்களை விமான சேவை மூலம் இணைக்க வேண்டும், அனைத்து தரப்பு மக்களும் பயணம் செய்யும் வகையில் நியாயமான கட்டணத்தில் விமானங்கள் இயக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் வருகின்ற 30 ஆம் தேதி முதல் சிறிய ரக விமான சேவையை தொடங்குகிறது.
சிறிய ரக விமானத்தில் 70 பயணிகள் வரை பயணிக்க முடியும். முதற்கட்டமாக திருச்சி, விஜயவாடா, ஹைதராபாத் உள்ளிட்ட 5 இடங்களுக்கு விமான சேவை தொடங்குகிறது. பின்னர் தூத்துக்குடி , மதுரை போன்ற இடங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. முன்பதிவு செய்பவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படும் என்றும் அலையன்ஸ் ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது.