Published : 03,Jan 2022 03:43 PM
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் ’வாத்தி’ படப்பிடிப்பு

நடிகர் தனுஷின் 'வாத்தி’ படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.
தனுஷின் இரண்டாவது பான் இந்தியா படமான ‘வாத்தி’யை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். இவர், ’தொழி பிரேமா’, ‘மிஸ்டர் மஜ்னு’, ’ரங் தே’ படங்களை இயக்கியுள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தின் தெலுங்கு தலைப்பு ‘சார்’ என்று வைக்கப்பட்டுள்ளது. தனுஷுக்கு ஜோடியாக ‘தீவண்டி’ படப்புகழ் சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.
வரும் 5 ஆம் தேதி படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், இன்று படத்தின் பூஜை நடைபெற்றது. தனுஷ், சம்யுக்தா மேனன், வெங்கி அட்லூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மித்ரன் ஜவகரின் ‘திருச்சிற்றம்பலம்’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, செல்வராகவனின் ‘நானே வருவேன்’ உள்ளிட்டப் படங்களில் தற்போது நடித்துவரும் தனுஷ் அடுத்ததாக,சேகர் கம்முலா, மாரி செல்வராஜ், ராம்குமார், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்டோரின் பெயரிடாதப் படங்களிலும் நடிக்கவிருக்கிறார்.