Published : 02,Jan 2022 02:53 PM
"செங்கரும்புகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்" - சசிகலா கோரிக்கை

பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடைக்குத் தயாராக உள்ள செங்கரும்புகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என வி.கே.சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மழை, வெள்ளம், இடுபொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று செங்கரும்புகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்து அதற்கான பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும் என்று வி.கே.சசிகலா கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிக்க: ''பிரதமரை வரவேற்பது தமிழக அரசின் கடமை'' - கனிமொழி எம்.பி. பேச்சு