Published : 28,Dec 2021 04:49 PM

பிரிட்டன்: எலிசபெத் ராணிக்கு வீடியோ மூலம் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Man-arrested-for-making-death-threats-to-Queen-Elizabeth-via-video-in-Britain

பிரிட்டன் நாட்டின் எலிசபெத் மகாராணிக்கு வீடியோ மூலம் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நாட்டில் உள்ள துறைமுக நகரமான சவுத்தாம்ப்டனை சேர்ந்த 19 வயது இளைஞரை லண்டன் போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது அவரது வீடியோவை ஆதாரமாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். 

image

வில்லும் அம்பும் ஏந்தியபடி அந்த நபர் மிரட்டல் விடுத்துள்ளதாக ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. “என்னை மன்னியுங்கள். எனது செயலுக்காக என்னை மன்னித்து விடுங்கள். அரச குடும்பத்தின் மகாராணி எலிசபெத்தை கொலை செய்ய நான் முயற்சித்தேன்” என ஹூடி போட்ட நபர் ஒருவர் வீடியோவில் தெரிவித்துள்ளதாக ஸ்புட்னிக் தகவல் அளித்துள்ளது. 

தற்போது அந்த இளைஞர் மனநலம் சார்ந்த மருத்துவ ஆலோசனை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர் லண்டன் போலீசார். எலிசபெத் ராணி வாழ்ந்து வரும் வின்ட்சர் கோட்டைக்குள் அவர் நுழைய முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.