’’ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி’’ - நாட்டு மக்களுக்கு பிரதமர் உரைஉலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் ஒமைக்ரானை எதிர்கொள்ள நாட்டு மக்கள் அனைவரும் தயாராக வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த ஆண்டின் கடைசி மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஹெலிகாப்டர் விபத்தில் நாட்டின் முப்படைகளின் முதல் தலைமை தளபதி உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். குறிப்பாக “கொரோனாவின் புதிய வடிவமான ஒமைக்ரான் தற்போது நமது வீட்டு கதவையும் தட்டத் தொடங்கியிருப்பதால், அதனை வீழ்த்த பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் நாட்டின் முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களை நாடு இழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. விபத்தில் உயிர் தப்பியிருந்த குரூப் கேப்டன் வருண் சிங், மரணத்தை வெல்ல பல நாட்கள் போராடி இறுதியில் நம்மை விட்டு பிரிந்து விட்டார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சவுரிய சக்ரா விருது பெற்ற வருண் சிங், அதற்காக தனது பள்ளி தலைமையாசிரியருக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது நெஞ்சத்தையும் கனக்க வைத்திருந்தது. எத்தனை உயரத்திற்கு சென்றாலும், ஏற்றிவிட்ட ஏணியை மறக்கக்கூடாது என்ற அவரது பண்பு போற்றுதலுக்குரியது” என்று பேசினார். தொடர்ந்து இந்திய கலாசாரத்தை பற்றி தெரிந்து கொள்ளவும், அதை பரப்பவும் வெளிநாட்டினர் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும் பேசினார்.
தொடர்புடைய செய்தி: ’’ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி’’ - நாட்டு மக்களுக்கு பிரதமர் உரை
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?