Published : 18,Dec 2021 02:20 PM
''ராஜேந்திரபாலாஜி வழக்கு குறித்து கருத்து கூற விரும்பவில்லை'' - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ராஜேந்திர பாலாஜி வழக்கு குறித்து கருத்து கூற விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
“நெல்லை பள்ளி விபத்து, எல்லோரின் மனதிலும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்கட்டமைப்பு குறித்து அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்தும், இப்படியான விபத்துகளை தவிர்ப்பது குறித்தும் அரசுக்கும் முதல்வருக்கும் நான் அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். அரசு அதை கணக்கில் கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேந்திர பாலாஜி மீதான குற்றச்சாட்டு, நீதிமன்றத்தில் வழக்காக நிலுவையில் உள்ளது. நீதிமன்ற கட்டுப்பாட்டில் அது இருப்பதால், அதுகுறித்து நான் கருத்துக்கூற விரும்பவில்லை.
தொடர்புடைய செய்தி:முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைப்பு
ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது குறித்து, உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசும் முறையான அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி இவ்வருடமும் ஜல்லிக்கட்டு நடக்கும்” என்றார்.