நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டிலுள்ள பள்ளியொன்றில் கழிவறைச் சுவர் கட்டடம் இடிந்து விழுந்ததில், இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்துள்ளனர்.
நெல்லை பொருட்காட்சி திடல் அருகேயுள்ள சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் சம்பவ இடத்திலேயே இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின்றி 3 மாணவர்கள் உயர் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடன் படித்த மாணவர்களின் இந்த உயிரிழப்பை தொடர்ந்து, அங்கு பள்ளியிலிருந்து பிற மாணவர்கள் பெரும் அச்சத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளனர். தற்போது மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறனர்.
இந்த விபத்துக்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் இன்னும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. காவல்துறை தரப்பிலும் இதுகுறித்த விசாரணை தொடங்கியிருப்பதாக மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பலரும் அச்சத்தில் இருப்பதால், அப்பகுதி முழுக்க பதற்றமும் பரபரப்பும் நிலவுகிறது. தகுதியில்லாத பள்ளி கட்டடத்தை முதன்மை கல்வி அதிகாரிகள் முறையாக பரிசோதிக்காமல் விட்டது ஏனென்ற கேள்வியும் எழுந்துள்ளது. பள்ளி மாணவர்களேவும், பள்ளிச்சுவரின் மோசமான நிலை குறித்து நம்மிடையே குறையாக முன்வைக்கின்றனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!