Published : 16,Dec 2021 09:43 PM
தமிழகத்தில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்திய அறிகுறி: மருத்துவத்துறை செயலாளர்

தமிழகத்தில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்திய அறிகுறி இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
சென்னை வளசரவாக்கத்தில் ஒருவருக்கு நேற்று மாற்றமடைந்த தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவருடன் தொடர்புடைய மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, ஒரே இடத்திலிருந்து 11 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. இந்த மரபணு மாற்றமடைந்த கொரோனா தொற்று உடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியை தீவிரமாக செய்து வருகிறோம் என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
மரபணு மாற்றமடைந்த கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்கள் நல்ல உடல்நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.