Published : 15,Dec 2021 10:00 PM

திருமங்கலம்: பன்றிக்காக வயலில் அமைக்கப்பட்ட சட்டவிரோத மின்வேலியில் சிக்கி விவசாயி பலி

Thirumangalam-farmer-death-when-he-was-trapped-in-illegal-electric-fence-in-field-for-pigs

மதுரை திருமங்கலம் அருகே பன்றி தொல்லையால் நெல் பயிருக்கு அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

டி.வலையங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தனது மனைவியுடன் விவசாய தோட்டத்துக்கு பருத்தி எடுக்கும் பணிக்கு சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள கதிர்வேல் என்பவரின் வயலில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை மிதித்த கிருஷ்ணன் என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காப்பாற்ற முயன்ற அவரது மனைவி அக்கம்மாளும் தூக்கிவீசப்பட்டு காயத்துடன் போராடினார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

image

இதனிடையே, நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் கதிர்வேலு சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தது விசாரணையில் தெரியவந்தது. கிருஷ்ணன் உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

இதனைப்படிக்க...ரெய்டு.. ஆவணங்கள் பறிமுதல்..ரீபிட்டு! முன்னாள் அமைச்சர்கள் மீதான சோதனைகள் கண்துடைப்பா? 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்