Published : 23,Aug 2017 02:43 PM

புதிய 200 ரூபாய் தாள்: விரைவில் புழக்கத்துக்கு வர வாய்ப்பு

confirmed-new-rs-200-note-will-be-rolled-out-soon-by-rbi

200 ரூபாய் தாள்களை அறிமுகப்படுத்துவது தொடர்பான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் குழு பரிந்துரையின் படி புதிய 200 ரூபாய் தாள்கள் வெளியிடப்படுதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அரசாணையை தொடர்ந்து 200 ரூபாய் தாள்கள் விரைவில் புழக்கத்துக்கு வரும் எனத் தெரிகிறது.

முன்னதாக புதிய 50 ரூபாய் தாள்கள் விரைவில் வெளியிடப்படும் என அரசு தெரிவித்திருந்தது. கடந்தாண்டு இறுதியில் புதிய 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அரசு அறிமுகப்படுத்தியது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்