Published : 04,Dec 2021 04:29 PM

ஏ.எல் விஜய் இயக்கத்தில் இணையும் விஜய் சேதுபதி - அனுஷ்கா?

director-al-Vijay-next-directorial-to-have-Vijay-Sethupathi-and-Anushka-Shetty

விஜய் சேதுபதி - அனுஷ்கா நடிக்கும் புதிய படத்தினை ஏ.எல் விஜய் இயக்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.எல் விஜய் இயக்கத்தில் சமீபத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் ‘தலைவி’ வெளியானது. இதனைத்தொடர்ந்து அடுத்ததாக விஜய் சேதுபதி - அனுஷ்கா இணையும் புதிய படத்தினை இயக்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மூலம் மீண்டும் அனுஷ்கா தமிழில் ரீ எண்ட்ரி கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அவரது நடிப்பில் கடந்த ஆண்டு ‘நிசப்தம்’ ஓடிடியில் வெளியானது. இந்த நிலையில், ஏ.எல் விஜய் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே, கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ‘தெய்வத்திருமகள்’, 2012 ஆம் ஆண்டு வெளியான ‘தாண்டவம்’ படங்களில் விஜய் இயக்கத்தில் அனுஷ்கா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

image

விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக ‘அனபெல் சேதுபதி’ படம் வெளியானது. ’விடுதலை, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘கடைசி விவசாயி’, ’யாதும் ஊரே யாவரும் கேளீர்’, ‘விக்ரம்’, ‘மைக்கேல்’ உள்ளிட்டப் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்