ஜப்பான் நாட்டில் இன்று நமீபியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென் ஆப்ரிக்காவில் மரபணு மாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ் வீரியமிக்கதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்கா, போட்ஸ்வானா, பெல்ஜியம், ஹாங்காங், இஸ்ரேல், பிரிட்டன், கனடா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அந்த நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.
இந்நிலையில், ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமையன்று(28.11.2021) ஜப்பானின் நரிடா விமான நிலையத்திற்கு வந்த 30 வயதுடைய நபருக்கு பரிசோதனை செய்யப்பட்டார். பின்னர் அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு ஒமிக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக என்று ஜப்பான் நாட்டின் தலைமை அமைச்சரவை செயலாளர் ஹிரோகாசு மாட்சுனோ தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தனியுரிமை காரணங்களால் அவரது நாடு மற்றும் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவருடன் பயணம் செய்தவர்கள் மற்றும் அவரின் அருகிலுள்ள இருக்கைகளில் பயணித்தவர்களின் அடையாளம் காணப்பட்டு சுகாதார அதிகாரிகள் பரிசோதனை செய்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஒமிக்ரான் மாறுபாட்டினை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் செவ்வாய்க்கிழமை முதல் தடை விதிப்பதாக ஜப்பான் அரசு அறிவித்தது.
இதனைப்படிக்க...இருக்கை மேல் திருமாவளவன் நடந்து சென்றது ஏன்? - விசிக வன்னி அரசு விளக்கம்
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!