உலக மக்களிடையே மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து ஜேக் டோர்ஸி விலக உள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களுக்கு அவர் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகின்ற காரணத்தினால் அதன் செயல் தன்மை குறித்து சிலர் கேள்வி எழுப்பி உள்ளதாக கடந்த ஆண்டில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து ட்விட்டர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து அவர் விலக உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக சிஇஓ பொறுப்பில் இருந்து விலகும் முடிவை எடுக்கும் நேரம் என ஜேக் டோர்ஸி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
not sure anyone has heard but,
I resigned from Twitter pic.twitter.com/G5tUkSSxkl
ட்விட்டரின் பங்கு மதிப்புகள் இன்றைய காலை நேர நிலவரப்படி எழுச்சி கண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அடுத்ததாக ட்விட்டர் நிறுவனத்தை தலைமை ஏற்று நடத்த உள்ளவருக்கு நிறைய சவால்கள் காத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. முன்னதாக 2008 வரை ட்விட்டர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்த ஜேக் டோர்ஸி, 2008 வாக்கில் அந்த பொறுப்பில் இருந்து விலகினார். 2015 முதல் மீண்டும் அந்த பொறுப்பை கவனித்து வந்தார். இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர் ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரை தொடர்ந்து அந்த பொறுப்பில் அடுத்து யார் நியமிக்கப்பட உள்ளார்கள் என்ற கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் எழுந்தன. ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் ஆகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மும்பை ஐஐடி, ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் படிப்பை முடித்த பராக் அகர்வால் தலைமை தொழில்நுட்ப அதிகாரியானார். பல்வேறு பொறுப்புகளை வகித்தபின் தற்போது ட்விட்டரின் சி.இ.ஓ. ஆகிகிறார் பராக் அகர்வால்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!