[X] Close

வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை, புதுச்சேரியில் கடல்சீற்றம்

Chances-for-heavy-rain-in-northern-districts-of-Tamil-Nadu

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


Advertisement

தெலங்கானா முதல் குமரி வரை வட தமிழக கடலோர பகுதி வழியாக காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருகிறது. இதன் காரணமாகவும் வெப்பச்சலனத்தினாலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலா மற்றும் சின்னகல்லாரில் 7 சென்டிமீட்டர் மழையும் வால்பாறையில் 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையில் கடல் சீற்றமாகக் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம் ஆல்காட்குப்பம், நடுக்குப்பம் போன்ற கடற்கரை பகுதிகளில் இரவு முதல் கடற்சீற்றம் அதிகமாகி, அலைகள் 15 முதல் 20 அடிக்கு மேல் எழும்புவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, 300-க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் கரைக்கு திரும்ப முடியாத நிலை இருக்கிறது.


Advertisement

புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் இரண்டாவது நாளாக புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்தில் இன்றும் கடல் சீற்றத்துடன் கொந்தளிப்புடனும் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அனைத்து படகுகளும் மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


Advertisement

Advertisement
[X] Close