[X] Close

இந்தியா: 538 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைந்த கொரோனா தினசரி பாதிப்பு

கொரோனா வைரஸ்

8488-COVID-19-new-cases-in-the-last-24-hours-lowest-in-538-days
இந்தியாவில் கடந்த 538 நாட்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
 
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கேரளாவில் மட்டும் 5,080 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 12,510 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 249 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 1,18,443 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.31% என்றளவில் உள்ளது. இது கடந்த 2020 மார்ச் மாதத்திற்குப் பின் மிக அதிகமானது. நாடு முழுவதும் சுமார் 116 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
 
Related Tags : கொரோனாCOVID-19coronavirus

Advertisement

Advertisement
[X] Close