[X] Close

பெண்களை குறிவைத்து தொடர் கைவரிசை: சிசிடிவியில் சிக்கிய கொள்ளையன் கைது

குற்றம்

Police-in-Chennai-have-arrested-and-jailed-a-robber-who-stole-gold-jewelery-from-25-women-with-the-help-of-CCTV-footage
சென்னையில் 25 பெண்களிடம் தங்க நகைகளை பறித்த கொள்ளையனை போலீசார் சிசிடிவி காட்சிகள் உதவியோடு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
சென்னை திருமங்கலத்தை அடுத்த பாடி குப்பம் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி வீட்டு அருகே உள்ள கடைக்கு சென்றார். பிறகு வீடு திரும்பும் போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் கலைச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றனர்.
 
இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையனை தேடிய ஜெஜெ நகர் போலீசார், மிட்டாய் கார்த்திக் என்பவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான அவரது கூட்டாளியையும் போலீசார் தேடி வருகின்றனர். கைதான கொள்ளையன் மிட்டாய் கார்த்திக், 25 பெண்களிடம் நகைகளை பறித்துள்ளதும், அவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close