[X] Close

ஓபிஎஸ் கிணறு தானமாக மக்களுக்கு வழங்கப்பட்டது: தமிழக கவர்னர் பெயரில் பத்திரப்பதிவு

ops-well-gave-to-village-people-and-registered-by-governor-name

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமைந்துள்ள ஓ.பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான கிணறு மற்றும் நிலம் கிராம மக்களுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.


Advertisement

பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் கிணறு வெட்டியதால் தண்ணீர் கிடைக்கவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். கிணற்றையும், கிணறு அமைந்துள்ள 18 சென்ட் நிலத்தையும் கிராமத்திற்கு தானமாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்‌து போராட்டம் நடத்திவந்தனர்.

இந்நிலையில் ஓபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் கிணறு மற்றும் நிலம் கிராம மக்களுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டு கிராம மக்களின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கிணற்றை அளித்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close