Published : 17,Nov 2021 11:10 AM

கொல்கத்தா புறப்பட்டார் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி

Chennai-High-Court-Chief-Justice-Sanjib-Banerjee-has-left-for-Kolkata

மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கொல்கத்தா புறப்பட்டார்.

இன்று தலைமை நீதிபதியும், நீதிபதி ஆதிகேசவலுவும் வழக்குகளை விசாரிப்பார்கள் என பட்டியல் வெளியிடப்பட்டிருந்த நிலையில் கொல்கத்தா புறப்பட்டுள்ளார்சஞ்ஜிப் பானர்ஜி, அவர் இன்று வழக்குகளை விசாரிக்கவில்லை.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ்  பானர்ஜி மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார், அவரது இடமாற்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர்.

image

பணியிட மாற்றத்தில் செல்லும்போது, பார் கவுன்சில், வழக்கறிஞர் சங்கங்கள் தரப்பில் பிரிவு உபசார நிகழ்ச்சிகள் நடத்தபடும். அவற்றையும் தவிர்த்துவிட்டு சென்றுள்ளார்சஞ்ஜிப் பானர்ஜி. தலைமை நீதிபதி அமர்வில் பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள் நீதிபதிகள் துரைசாமி, சத்திய நாராயண பிரசாத் அமர்வு விசாரிக்கிறது.

இதனைப்படிக்க...மகாராஷ்ட்ரா: 5,000 பேருக்கு பிரசவம் பார்த்த செவிலியர், பிரசவ நேர சிக்கலால் உயிரிழந்த சோகம் 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்