சென்னையில் இன்றும் நாளையும் அதி கனமழைக்கான சிவப்பு வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம், தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நிலைகொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நாளை கடலூர் அருகே கரையைக் கடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் இன்று (10.11.2021), சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றுக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் நாளை(11.11.2021), திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, புதுச்சேரி, கோயம்புத்தூர், நீலகிரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் அறிவித்திருக்கிறது. மேலும், வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் 11ஆம் தேதி காலை முதல் வீசக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
மணிக்கு 65கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் - மீனவர்களுக்கு எச்சரிக்கை
தற்போதுவரை தமிழகத்தில் 5 இடங்களில் அதி கனமழையும், 21 இடங்களில் மிக கனமழையும், 40 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல், சென்னை, புதுச்சேரி உட்பட 8 மாவட்டங்களில் இன்று(10.11.2021) அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் சென்னைக்கு இன்றும், நாளையும் சிவப்பு வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மட்டுமே அதிகனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் தற்போது நாளையும் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Loading More post
இபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு
`பாட்டு பாடியே கொலை மிரட்டல்’- சென்னை இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்
தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ
இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியம் - நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு
நள்ளிரவில் நெரிசலுக்கு உள்ளாகும் பெங்களூரூ- சென்னை தேசிய நெடுஞ்சாலை: கவனிக்குமா நிர்வாகம்?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix