Published : 05,Nov 2021 08:27 PM
மகனுடன் ‘அண்ணாத்த’ படத்தை தியேட்டரில் ரசித்துப் பார்த்த ஷாலினி அஜித்

நடிகை ஷாலினி அஜித் ‘அண்ணாத்த’ படத்தை தனது மகனுடன் தியேட்டருக்குச் சென்று பார்த்து ரசித்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ’அண்ணாத்த’ தீபாவளியையொட்டி நேற்று தியேட்டர்களில் வெளியானது. 'தர்பார்' படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்தில் நடித்துள்ளார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். அண்ணன் தங்கை பாசக்கதைக்களத்தைக் கொண்ட ‘அண்ணாத்த’ ஒரே நாளில் 34 கோடி வசூல் செய்துள்ளது என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், நடிகை ஷாலின் தனது மகன் ஆத்விக் அஜித்துடன் இன்று சத்யம் சினிமாவில் ‘அண்ணாத்த’ படத்தைப் பார்த்துள்ளார். ரசிகர்கள் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், தியேட்டரிலிருந்து ஷாலினி ஆத்விக்குடன் வரும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.