Published : 05,Nov 2021 10:07 AM

சீர்காழி: பறவைகளை வேட்டையாடியதாக 4 பேர் கைது: ரூ.35 ஆயிரம் அபராதம்

Sirkazhi-4-arrested-for-poaching-birds-35-thousand-fine

சீர்காழி அருகே பறவைகளை வேட்டையாடிய நான்கு பேர் கைது. ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதியில் சீர்காழி வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சீர்காழி அருகே மயிலக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா, விஜயன் மற்றும் பொறையார் அருகே ராஜா, சுரேஷ் ஆகிய நான்கு பேரும் மடையான், கொக்கு உள்ளிட்ட பறவைகளை வேட்டையாடி பிடித்துக் கொண்டிருந்தனர்.

image

அப்போது அவர்களை வனத் துறையினர் கைது செய்து நான்கு நபர்களுக்கும் ரூபாய் 35 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதையடுத்து நான்கு பேர் மீதும் சீர்காழி வனத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்