Published : 03,Nov 2021 07:27 AM

விராட் கோலிக்கு மிரட்டல்: காவல் துறைக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

The-Women-s-Commission-has-sent-a-notice-to-the-Delhi-Police-regarding-the-online-threat-made-to-Virat-Kohli-for-the-World-Cup-defeat
உலகக் கோப்பை தோல்விக்காக, விராட் கோலிக்கு, ஆன்லைனில் மிரட்டல் விடுத்தது தொடர்பாக, டெல்லி காவல்துறைக்கு, மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரில், இந்திய அணி அடுத்தடுத்து இரு தோல்விகளை சந்தித்தது. இதையடுத்து கேப்டன் விராட் கோலியின் குடும்பத்தினரை மிரட்டும் வகையில், சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டனர். இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு, டெல்லி காவல்துறைக்கு, டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே, விராட் கோலிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், யாரும் அன்பு செலுத்தாததால் அவர்கள் வெறுப்புடன் இருப்பதாகவும், அவர்களை மன்னிப்பதோடு, அணியை காப்பாற்ற வேண்டும் என விராட் கோலிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்