தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி குற்றச் செயல் நிகழாமல் இருக்க வண்ணாரப்பேட்டை எம்.சி.சாலையில் 'ட்ரோன்' மூலம் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னையில் பெரும்பாலான வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை வண்ணார்பேட்டை எம்.சி.ரோடு பகுதியில் பொதுமக்கள் அதிக அளவில் புத்தாடைகள் வாங்குவதற்கு வருகின்றனர்.
அங்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ரோந்து காவலர்கள், ரோந்து வாகனங்கள், அவ்வப்போது சுற்றி வந்தும், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, பைனாகுலர் மூலம் கண்காணித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்காலிக கட்டுப்பாட்டறை அமைத்தும், காவல் குழுவினர் ஒலி பெருக்கிகள் மூலம் அறிவுரைகள் வழங்கியும் வருகின்றனர். ராயபுரம் காவல் ஆய்வாளர் பூபாலன் தலைமையில், 'ட்ரோன்' கேமரா மூலம் எம்.சி.ரோடு பகுதியில் கூட்டத்தினரை தொடர்ந்து கண்காணித்து குற்றவாளிகள் நடமாட்டம் உள்ளதா என கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கேமரா மூலம் குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணித்து பொதுமக்களுக்கு பிரச்னை எதுவும் நிகழாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவாமலும், பொதுமக்களின் உடைமைகள் திருடு போகாமலும் காவல்துறை சார்பில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!