Published : 31,Oct 2021 09:13 PM

இந்தியா மோசமான பேட்டிங் : நியூசிலாந்து அணிக்கு 111 ரன்கள் மட்டுமே இலக்கு!

India-Scored-just-110-runs-against-New-Zealand-in-Super-12-Match-of-the-T20-World-Cup

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை சொப்பர் 12 சுற்றில் இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இஷான் கிஷன், கே.எல்.ராகுல், ரோகித், கோலி, பண்ட் என இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஐவரும் ரன் சேர்க்க தடுமாறி, விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.

image

ஹர்திக் பாண்டியா 24 பந்துகளில் 23 ரன்களை எடுத்து அவுட்டானார். ஜடேஜா ரன்கள் எடுத்திருந்தார். தாக்கூர் டக் அவுட்டாகி வெளியேறினார். இந்தியா இந்த இன்னிங்ஸில் மொத்தம் 54 பந்துகள் ரன் ஏதும் எடுக்கவில்லை. அனைத்தும் டாட் பந்துகளாக வீசி இருந்தது நியூசிலாந்து. 

சோதி, போல்ட், மில்னே மற்றும் சவுதி என நியூசிலாந்து பவுலர்கள் நல்ல லைன் மற்றும் லெந்தில் பந்து வீசி இருந்தனர். நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு இந்த ஆட்டத்தில் 111 ரன்கள் தேவை. 

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்