Published : 28,Oct 2021 01:20 PM
கவனம் ஈர்க்கும் வெற்றிமாறன் - சூரி - விஜய் சேதுபதியின் ‘விடுதலை’ புகைப்படங்கள்

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.
’அசுரன்’ பட வெற்றிக்குப் பிறகு, வெற்றிமாறன், பாவக்கதைகள் படத்தில் இடம்பெற்ற நான்கு பாகங்களில் ஒன்றான ‘ஓர் இரவு’ என்ற கதையை இயக்கி இருந்தார்.
அதன்பிறகு, தற்போது ஜெயமோகனின் ’துணைவன்’ சிறுகதையை எடுத்து சூரியை வைத்து ’விடுதலை’ படத்தினை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில், சூரியுடன் விஜய் சேதுபதியும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இளையராஜா இசையமைக்க, எல்ரெட் குமார் தயாரித்துள்ளார்.
பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் படப்பிடிப்பை முடித்த கையோடு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படத்தின் தலைப்பையும் வெளியிட்டது படக்குழு.
போலீஸாக நடிக்கும் சூரி, கையில் விலங்குடன் இருக்கும் விஜய் சேதுபதி ஆகியோரின் மிரட்டல் போஸ்டரும் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன.
சூரி, விஜய் சேதுபதி, வெற்றிமாறன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது படக்குழு.