[X] Close

பணியின் போதே மாரடைப்பால் மரணமடைந்த சேலையூர் உதவி ஆய்வாளர்

தமிழ்நாடு

Selaiyur-sub-inspector-died-by-heart-attack-when-he-was-on-duty

சேலையூர் உதவி ஆய்வாளர் பணியின் போதே மாரடைப்பால் மரணமடைந்தார்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஹரிராமன்(58). இவர் தற்போது சேலையூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் 1986ம் ஆண்டு  பணியில் சேர்ந்தார். சிட்லபாக்கம், கானத்தூர் உட்பட பல காவல் நிலையங்களில் பணிபுரிந்த ஹரிராமன், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சேலையூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

நேற்று இரவு சேலையூர் பகுதியில் ரோந்து பணியை முடித்து வீட்டிற்கு சென்ற இவர், இன்று மதியம் 2 மணிக்கு மீண்டும் காவல் நிலையத்திற்கு பணிக்கு வந்துள்ளார். இன்று காவல் நிலையத்திலுள்ள இருக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ஹரிராமனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சக போலீசார் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமவைனக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து குரோம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட  ஹரிராமன், சிகிச்சை பலனின்றி மாலை 5:30 மணிக்கு உயிரிழந்தார்.


Advertisement

image

ஹரிராமனுக்கு ராஜேஸ்வரி(50) என்ற மனைவியும், சோமகந்தன்(28) என்ற மகனும் உள்ளனர். பணியில் இருந்தபோதே, ஹரிராமன் இறந்துள்ள நிலையில் அவரது மகனுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்லி: அமித்ஷா, நிர்மலா சீதாரமன் உடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி சந்திப்பு 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close